இந்திய வீரர்களுக்கு தொற்று இல்லை: பரபரப்பாகத் தொடங்குகிறது 5 வது டெஸ்ட்

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில், இந்திய அணி…

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங்
பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு ஏற்கனவே
கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெர பிஸ்ட் யோகேஷூக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக, மான்செஸ்டரில் இன்று டெஸ்ட் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இன்றைய டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த தொடரில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணியில், சில மாற்றங் கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஷமி அணிக்கு மீண்டும் திரும்புவார் என்றும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.