இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கை எடுத்து…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கை எடுத்து வருகிறது. இருந்தும் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் தொற்று பாதித்து, 3, 32 158 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3, 34 48,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 38,945 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3, 26, 71,167 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 309 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை 4, 44, 838 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 80,43,72,331 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.