முக்கியச் செய்திகள் குற்றம் சினிமா

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை

பிரபல நடிகருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட ஹீரோ தர்ஷன். இவருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் மைசூரு அருகே உள்ளது. இங்கு அவர் குதிரைகளை வளர்த்து வருகிறார். ஓய்வு நேரத்தில் அங்கு  குதிரை சவாரி செய்வது வழக்கம். அவற்றைக் கவனித்துக் கொள்ள சிலர் அங்கு பணியாற்றி வருகிறார்கள்.

சிவமூக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்தப் பண்ணை தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களின் பத்து வயது மகளை, கடந்த 13-ஆம் தேதி குதிரை பராமரிப்பாளர் நசீம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நசீம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இந்தச்சம்பவம் குறித்து சிறுமி , பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நசீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொடுமை!

Vandhana

55 நிமிடத்தில் 55 வகை உணவுகள் சமைத்த 13 வயது சிறுமி!

Jayapriya

“பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்” – பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டு

Saravana Kumar