தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்கள் கைது!

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவே தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.