முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு? என்ன சொல்கிறது புள்ளி விவரம்?

தமிழகத்தில் நடந்துள்ள கொலைகள் எத்தனை? கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது??? இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் சமீபத்தில் நடந்துள்ள கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துண்டு துண்டாக வெட்டிக் கொலை, துண்டு துண்டாக வெட்டி கொன்று உடல் பாகங்களை பிரிட்ஜில் வைப்பது என சமீபத்திய கொலைகள் நெஞ்சை பதற வைக்கும் வகையிலான சம்பவங்களாக இருக்கிறது என்பது வேதனைக்குரியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 82 பேர் கொலை செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் சொல்கிறது. இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் அதிக கொலை சம்பவங்கள் நடக்கிறது. எண்ணிக்கை அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் தான் அதிக கொலை சம்பவங்கள் நடந்துள்ளன என்கிறது 2021ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்.

2021ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் 3,717 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 3,825 பேர் இறந்துள்ளனர். பீகாரில் 2,799 கொலை சம்பவங்களில் 2,826 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 2,330 கொலை சம்பவங்களில் 2,381 பேர் இறந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,034 கொலை சம்பவங்களில் 2075 பேர் இறந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 1,884 கொலை சம்பவங்களில் 1,919 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு 1,745 கொலை சம்பவங்களும், 2020ஆம் ஆண்டு 1,661 கொலை சம்பவங்களும், 2021ஆம் ஆண்டு 1,678 கொலைகளும் நடந்துள்ளது என்று சொல்கிறது குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள். 2020ஆம் ஆண்டை காட்டிலும் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் கொலை சம்பவங்கள் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 172 கொலை சம்பவங்களும், 2020 ஆம் ஆண்டு 150 கொலை சம்பவங்களும், 2021 ஆம் ஆண்டு 161 கொலை சம்பவங்களும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சுப்பிரமணியன், குற்றப்பிரிவு தலைமைச் செய்தியாளர், நியூஸ் 7 தமிழ்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

துணை நடிகர்களுக்கு சம்பள உயர்வு – விஷால் பேச்சு

EZHILARASAN D

சினிமாவாகிறது கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை: இவர்தான் ஹீரோ?

Gayathri Venkatesan

திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!

Web Editor