திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்.
தமிழர் திருநாளாம் தை தைப்பொங்கலை நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் விமர்சையாக
கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர்
கிராமத்தில் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட கழகம் சார்பாக பாரம்பரிய முறைப்படி
70-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து, பிரம்மாண்டமாக பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சூரிய வணக்கம் செய்து பொங்கலை தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதிமுகவுக்கு வழி பிறந்துவிட்டது என்றார். நானும் விவசாயி என்பதால் இங்கு விவசாயிகளுடன் மாட்டு பொங்கலில் பங்கேற்பது மகிழ்ச்சி என்றார். விவசாயிகள் மட்டும்தான் நாட்டுக்கு உணவளிக்கின்றனர் என்று புழாரம் சூட்டிய அவர், நாடும், நாட்டு மக்களும் வளம்பெற இறைவறை வேண்டுகிறேன் என்றார்.
விவசாய பணி கடுமையானது என்றும், இரவு, பகல், மழை, வெயில் பார்காமல்
உழைப்பவர்கள் விவசாயிகள் என்றார். கடந்த அதிமுக ஆட்சியில் 5 கோடி ரூபாய் சிறுவாச்சூர் இழுத்தவாரி ஏரி திட்டத்திற்கு அறிவித்தோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
ஆளும் திமுக அரசு விவசாயிகளை புறக்கணித்து விட்டனர் என்ற அவர், அதிமுக
ஆட்சியில் குடிமராமத்து திட்டம் தந்து நீர்நிலைகள் தூர்வாறி அதிக அளவு
தேக்கினோம். அதுமட்டுமல்லாமல் 2248 கோடி வறட்சி நிவாரணம் தந்ததுடன்,
பயிர்காப்பீடு மூலம் காப்பீடு பெற்று தந்ததும், இரண்டுமுறை பயிர்கடன் தள்ளுபடி
செய்ததும் அதிமுக அரசுதான் என்றார்.
வறட்சி பகுதியில் மக்காசோளம் அமெரிக்கன் படைபுழுவால் பாதிக்கப்பட்டதற்கு 150
கோடி தந்தோம். பூச்சிகொல்லி மருந்தை அரசே அடித்தது என்றார். அதேபோல் மரவள்ளி
கிழங்கு பயிரில் மாவுபூச்சிக்கு மருந்து அடித்து அதனை காதுகாத்தோம் என்றார்.
ஆனால் திமுக கடந்த இரண்டு ஆண்டுகளாக மரவள்ளி விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.
திமுக அரசு கடந்த ஆண்டு தரமில்லாத பொங்கல் தொகுப்பு தந்தனர். திமுக
ஆட்சியில் தான் சுட்டிகாட்டியதால் தான் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்குடன் முழு
கரும்பு தரப்பட்டது என்றார். திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது என்றார்.
இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றதுடன் வெறும் பத்திரிகை விளம்பரம் மட்டும்தான் என்றார். திமுக ஆட்சியில் மின்கட்டணம் 53 சதம் உயர்த்தி விட்டனர். பால்விலை, சொத்து வரி உயர்த்தியும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் உள்ளது. உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
ஆனால் பல கால்நடைகள் இறந்த பின்னர் தான் மருந்து தேவை என்று கடிதம்
எழுதுகின்றனர் என்னார். இந்தியா முழுவதும் தெரியும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தந்தோம். அந்த திட்டத்தையும் திமுக அரசு ஆமைவேகத்தில் நடத்தி வருகின்றனர் என்றார். கால்நடை பூங்கா அருகில் தோல் தொழிச்சாலை கொண்டுவர உள்ளனர் என்றார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினர். அதை இதுவரை
தரவில்லை. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி அதற்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றனர். இதுவரை செய்யவில்லை. முதியோர்களுக்கான உதவி தொகை உயர்த்தப்படும் என்று கூறிவிட்டு அதனை நிறுத்திவிட்டனர் என்றார். தமிழகத்தில் மட்டும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதன் காரணமாக டிராக்டர் வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கின்றனர் என்றார்.
தைபொங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை முறையாக வழங்கவில்லை என்று கூறியதுடன். அரசு பள்ளியில் படிக்குப் ஏழை மாணவர்கள் மருத்துவம், கால்நடை மருத்துவம் படிக்க 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தந்தோம். இந்த ஆண்டு ஏழை மாணவர்கள் 564 பேர் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கின்றனர். வேளான் மக்கள் பயன் பெறவேண்டும் என்பதற்காகதான் அதிமுக ஆட்சியில் கரவை மாடுகள், ஆடுகள், கோழிகள் தந்தோம் என்றார்.







