முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருவள்ளுவர் தின வாழ்த்து சொன்ன பாஜக அண்ணாமலை: பதில் சொன்ன எம்.பி கனிமொழி

நெற்றியில் விபூதி, பட்டை, காவி நிற உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவள்ளுவர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பி- யுமான கனிமொழி திருக்குறளை படித்ததால் காவிக்கும் திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.

திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்திகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாரதியா ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, காவி நிற உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, கிராம மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையாம் மாட்டு பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.” என்று ஒரு பதிவில் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் திருவள்ளுவர் தினம் குறித்த மற்றொரு பதிவில், நெற்றியில் விபூதி, பட்டை, காவி நிற உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு “சிறப்புமிக்க திருவள்ளுவர் தினத்தில் வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்கு தேவையானது, தேவையற்றதை தெளிவாக சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரை போற்றுவோம், கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாஜக அண்ணாமலையின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள, திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பி- யுமான கனிமொழி , திருக்குறளை படித்ததால் காவிக்கும் திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள். திருக்குறளை படிக்க வேண்டும். திருக்குறளுக்கான கருணாநிதி உரை தெளிவாக உள்ளது. அதை படித்தாலே புரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார் . திமுக சார்பில் சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் நடத்தப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு இந்த பதிலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வனத்துறை கேமராவில் 8 நாளுக்குப் பின் சிக்கிய புலி

Halley Karthik

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: அரசிடம் விளக்கம் கோரும் ஆளுநர்

EZHILARASAN D

வெள்ள பாதிப்பு; ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும்

Halley Karthik