மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும்! – முதல்வர் பழனிசாமி

மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து…

மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக அரசு கொண்டு வராது என கூறினார். மக்கள் நலனை சிந்திக்காத கட்சி திமுக என சாடிய முதலமைச்சர் பழனிசாமி, அதனால் தான் 10 ஆண்டுகளாக மக்கள் திமுகவை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே ஊழலுக்கு சொந்தக்கார இயக்கம் திமுக தான் என்றும், ஊழல் என்ற சொல்லே அவர்களது ஆட்சியில் தான் வந்தது என்றும் முதலமைச்சர் சாடினார். மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், கனவில் கூட ஸ்டாலினால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply