சுவடுகள் : 2025இல் நிகழ்ந்த கோர விபத்துகள்…!

2025ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய விபத்துகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இந்த 2025 ஆம் ஆண்டு பல நல்ல சம்பவங்களை நம்மை சுற்றி நிகழ்த்தியிருந்தாலும் சில மோசமான விபத்துக்களை வடுக்களாக  விட்டு சென்றுள்ளது. அவற்றில் சில….

1. ஜல்கான் ரயில் விபத்து : புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது  2025-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்தது ஜல்கான் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலில் தீப்பிடித்துவிட்டது என வந்தந்தி பரவியதை தொடர்ந்து பயணிகள் கடும் பீதியடைந்து, அபாயச் சங்கிலியை (Emergency Chain) பிடித்து இழுத்தனர்.

மேலும் ரயில் வேகம் குறையும் முன்பே, உயிருக்கு அஞ்சிய பலர்  ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்தனர். ஆனால் அதே நேரத்தில், பக்கத்து தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த மற்றொரு ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

2 . கும்பமேளா கூட்ட நெரிசல் : உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஜனவரி 29, மதியம் மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடலுக்காக பக்தர்கள் திரண்டபோது, தடுப்புகள் உடைந்து நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில், அதிகாரப்பூர்வமாக 37 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. அகமதாபாத் விமான விபத்து (ஏர் இந்தியா 171) : 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 அதிகாலை நேரத்தில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா (Air India) விமானத்தில் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த அவ்விமானம் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தால் விமானத்தில் இருந்த 12 பணியாளர்கள், 229 பயணிகள் மற்றும் தரையில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 67 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் அதிர்ஷ்வசமாக 1 பயணி மட்டும் உயிர் பிழைத்தார்

4. டொமினிகன் குடியரசு நைட் கிளப் விபத்து : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள தி ராயல் கிளப்பில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பாடகர் ரூபி பெரெஸ் என்பவரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது  அதிகப்படியான அலங்கார விளக்குகள் மற்றும் கனரக ஒலிபெருக்கிகள் காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மேற்கூரை விழுந்தவுடன் மின்சாரக் கசிவு ஏற்பட்டு, கிளப்பின் உட்புற அலங்காரப் பொருட்களில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் மேடையில் பாடிக்கொண்டிருந்த டொமினிகன் குடியரசின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான ரூபி பெரெஸ் உள்பட மொத்தம் 236 பேர் உயிரிழந்தனர். மேலும் 350-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

5 . காங்கோ படகு விபத்து : காங்கோ ஜனநாயகக் குடியரசில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி படகு விபத்து ஒன்று நிகழ்ந்தது. காங்கோவின் மடான்குமு துறைமுகத்திலிருந்து போலோம்பா பிரதேசத்திற்குப் புறப்பட்ட HB கொங்கோலோ என்ற படகு, மந்தகா நகருக்கு அருகில் தீப்பிடித்தது.  ஒரு பெண் கப்பலில் சமைத்துக் கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானதாக அதிகாரிகள் கூறினர் . இந்தத் துயரச் சம்பவத்தால் நீரில் மூழ்கியும், தீக்காயங்களாலும் மொத்தம் 148 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

6 . பெங்களூரு கூட்ட நெரிசல் :  பெங்களூரு அணி 18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையோட்டி 2025-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கோர நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும் அவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

7. குஜராத் பாலம் சரிவு : 2025-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மஹீ ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

8. கரூர் கூட்ட நெரிசல் : தவெக என்னும் புதிய கட்சியை தொடங்கியிருந்த நடிகர் விஜய் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற  விஜயின்  பிரசாரத்தில் காடும் கூட்ட நெரிசம் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மாநில அரசியைல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.