குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகளின் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியிலிருந்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே அறிவித்தபடி, டெல்லியில் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் தயாராகி உள்ளனர். இந்த பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் டெல்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பிறகு, டெல்லிக்குள் பேரணி நடத்த விவசாயிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் பங்கேற்கும் இந்த பேரணி, திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூர் எல்லைகளில் இருந்து டெல்லிக்குள் நுழைந்து, பின்னர் மாலையில் பேரணியை முடித்து கொண்டு பழைய பகுதிகளுக்கே திரும்பும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குடியரசு தின டிராக்டர் பேரணியை போன்று, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக நடந்து செல்ல இருப்பதாக சிங்கு எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.