“ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!

பாமகவில் நிலவி வரும் குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸை பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்திக்க வந்துள்ளார். அப்போது ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், “பாமகவில் இருவரும் மாறி, மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாமகவில் நிலவி வரும் குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இருவரும் அமர்ந்து மனம் விட்டு பேசினால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும். சட்டமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது என்பதால் கொறடா தொடர்பாக எந்த பிரச்சனையும் வராது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.