கிரிப்டோ கரன்சி முதலீட்டில் பண மோசடி செய்தவர் கைது

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தனியார் கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக் கூறி பொதுமக்களை ஏமற்றி வந்த உடையார்பாலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கைது. தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தி கிரிப்டோ…

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தனியார் கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக் கூறி பொதுமக்களை ஏமற்றி வந்த உடையார்பாலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கைது.

தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தி
கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்தால் அதிக லாபமும், பரிசு பொருட்களும்
கொடுப்பதாக, பொதுமக்களிடம் கூறி பலரிடம் ரூ.77,750 பணத்தை பெற்றுள்ளார்.
பணத்தை ஏமாற்றி மோசடி செய்ததாக தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் போலீசில் அளித்த  புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட இணையக் குற்ற காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.

அவரிடமிருந்து செல் போன், 2 சிம்கார்டு, ஏடிஎம் கார்டு,ஆயிரம் ரூபாய் பணம், விசிட்டிங்
கார்டுகள், மற்றும் கிரிப்டோ கரன்ஸி குறித்த நோட்டீஸ்
ஆகியவற்றை போலிசார் கைப்பற்றி விசாரணை செய்தனர். இதனையடுத்து ராமலிங்கம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் விசாரணையில் இவர் மனித உரிமை கழக மாவட்ட தலைவர், அமுதசுரபி அறக்கட்டளை நிறுவனர், நீதித்துறை எழுத்தர், மது ஒழிப்பு குழு, மாவட்ட தலைவர் வெஸ்டேஜ் நிறுவனத்தின் ஸ்டார் டைரக்டர் என பல்வேறு விசிட்டிங் கார்டுகளை அடித்து வைத்துக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளதாக தெரிய வருகிறது.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.