அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கு எதிராகத் தீர்மானம்!

அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட, செங்குந்தபுரம், தேவனூர், புதுக்குடி உள்ளிட்ட 7 இடங்களில், ஹைட்ரோ கார்பன்…

அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட, செங்குந்தபுரம், தேவனூர், புதுக்குடி உள்ளிட்ட 7 இடங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்குடி ஊராட்சி மன்றம் சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், அரியலூர் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏற்கெனவே புதுக்குடி கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கறுப்புக்கொடி, சாலை மறியல் போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை, பொதுமக்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.