36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் குற்றம் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சட்டம் வணிகம்

ஆன்லைன் மோசடிகள் எப்படி நடக்கிறது? எப்படி ஏமாற்றுகிறார்கள்?


R சுப்பிரமணியன்

எந்தெந்த முறையில் ஆன்லைன் மோசடிகள் நடக்குது. பொதுமக்கள் எப்படியெல்லாம் ஏமாத்தப்படுறாங்க? அத பத்தி விரிவாக பார்க்கலாம்.

1. வலைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் care எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE CALLS செய்பவர், உங்களுக்கு உதவுவது போல் LINK அனுப்பியோ SCREEN SHARE செய்ய விலியுறுத்தியோ OTP விபரங்கள் பெற்றும் உங்கள் வங்கி கணக்கை HACK செய்து மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. 2. உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ அல்லது லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்புவார்கள். அந்த SMSயை கண்டு கொள்ளாமல் இருந்தால் LINK ஐ CLICK செய்ய வலியுறுத்துவார்கள். இந்நிலையில் அதனை CLICK செய்யாமல் தவிர்க்கவும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

3. Facebookல் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவங்கி உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்புண்டு. எனவே பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ உறுதி செய்யவும்.

4. SOCIAL MEDIAவில் வரும் LINK- ஐ, CLICK செய்தால், வங்கி கணக்கு முடங்க வாய்ப்புள்ளது.

5. குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக SOCIAL MEDIA தகவலின் அடிப்படையில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக செயல்படவும். அது Fake website ஆக இருக்கலாம்.

6. முதலீடு செய்யும் பணத்திற்கு தினசரி 1சதவீதம் கமிஷன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்யக்கூடாது. மாதத்திற்கு 30 சதவீதம் கமிஷன் யாராலும் தரமுடியாது என்பதை சற்று நிதானமாக யோசித்து பாருங்கள்.

7. உங்கள் தொலைபேசி எண்ணுக்கு விலை மதிப்பு மிக்க பரிசு விழுந்துள்ளது என வரும் தகவலை நம்பி அதை பெற அவர்களால் சொல்லப்படும் எந்த கட்டணத்தையும் செலுத்தக்கூடாது.

8. அறிமுகம் இல்லாதவர்களிடம் WhatsApp CALL-லில் பேச கூடாது. உங்கள் செல்போனில் உள்ள CAMERAவினால் எதிர்முனையில் உள்ளவர்களால், உங்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அந்த பதிவுகளை உங்கள் உறவினர்களுக்கோ அல்லது சமூக வலை தளங்களில் பதிவிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறிக்க மோசடி நபர்கள் திட்டமிடுவார்கள்.

9. கடைகளில் ஒட்டப்பட்டுள்ள QR – CODEகளை கடை உரிமையாளர்களுக்கு தெரியாமல் மோசடி நபர்கள் மாற்றி வைக்க வாய்ப்பு உள்ளது. எனவே QR CODEகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

10. டிஜிட்டல்மயம் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி வங்கி கணக்கு எண், கிரிடிட், டெபிட் எண்கள் மற்றும் ரகசிய எண், சிவிவ எண், ஓடிபி எண், நெட் பேங்கிங் பாஸ்வேர்டு ஆகியவற்றை கேட்டால் தெரிவிக்க வேண்டாம். அதனை மீறி தெரிவித்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடி வாய்ப்பு உள்ளது.

ஆர்.சுப்பிரமணியன், குற்றப்பிரிவு தலைமை செய்தியாளர்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading