முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் பக்தி செய்திகள்

காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”


சுப்பிரமணியன்

கட்டுரையாளர்

ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல் நாளில் திருச்சி திருப்பாராய்த் துறையிலும், மாத கடைசியில் மயிலாடுதுறையில் நீராடுவதும் விஷேசம் என்கிறது.

சூரிய உதயம் முன்பு, காவிரியில் மும்மூர்த்திகளும், தேவர்களும், சித்தர்கள், முனிவர்களும், நீராடிப்போவதால், இந்த நேரத்தில் குளிப்பதென்பது, கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்கின்றன சாஸ்திரங்கள். இது தவிர, இம்மாதத்தில், கங்கா, யமுனா, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் இங்கு நீராடி, மனிதர்கள்,தம்மிடம்விட்டுச் சென்ற, பாபக் கறைகளைப் போக்கிக் கொள்கின்றன என்கிறது “காவேரி மஹாத்மியம்”.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துலா காவேரி நீராடலில், அழகு,ஆரோக்யம்,செல்வம், கல்வி, மாங்கல்யப் பேறு, குழந்தைப்பேறு, தவிர,புத்தியும்,முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். நீராடுபவர்கள், தன்னையும்,குடும்பத்தினரையும், முன்னோர்களின் பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம்.  காவேரி புராணம் என்ற நூல் ,”வளமான வாழ்வு தருபவள் காவேரி”என்கிறது.இப்படித் தன்னிடம் சேர்ந்த பாபக் கறைகளை போக்கிக்கொள்வதற்கு,திருமங்கலங்குடி, திருத்தலத்திலும், மயிலாடுதுறை (உத்திர வாஹினியாக,தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) ஆகிய இடங்களில் போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு மற்ற மாதங்களில் வடக்கில் உள்ள கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வர் ஆனால், ஐப்பசியில், தங்கக் குடங்களில் திருச்சி அம்மா மண்டப படித்துறையிலிருந்து புனித தீர்த்தம் சேகரிக்கப்பட்டு,அதை யானை மீது ஏற்றி எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். இம்மாதப் பவுர்ணமியில் தான், பரம் பொருளான, சிவபெருமானுக்கு, பல ஆலயங்களில் அண்ணா பிஷேகம் நடக்கும்.

“ஆயிரமானாலும், மாயூரம் ஆகுமா”என்பார்கள். சிவபெருமான் தன் ரிஷப வாகனத்திலேறி,துலா மாதத்தில்,உலகை வலம் வந்த போது, நந்தி எனும் ரிஷபம்,மாயூரம் காவேரி ஆற்றின் கவர்ச்சியால்,நடுவில் தங்கி விட, சிவன், தன் காலால் அதை அழுத்தி, அதள பாதாளத்தில் இருக்கச் செய்து,பின்னர், விமோசனம் தந்ததாக ஒரு கதை உண்டு.ஆகவே சிவனின் கால் பதித்ததாலும்,நந்தி அம்சம் அங்கே இருந்து ஆசிர்வதிப்பதாலும் அது விஷேசமாக போற்றப்படுகிறது.மைசூர் தலைக்காவேரியிலும் இவ்விழா நடக்கும்.

மற்றொரு கதை சிவன், உமாதேவிக்கு, காவேரி மஹாத்மியத்தைக் கூற,பின்னாளில் அதை,சுமத்திரங்கி எனும் ரிஷி,தேவ வர்மன் என்ற மன்னனுக்கு சொல்வதாக வருகிறது.சிவனும், பார்வதி தேவியும், துலா மாதத்தில் ஒருநாள் காவிரி நந்தவனத்தில் இருந்தபோது, பறவைகள் வடிவில் நதி தேவதைகள்,வந்து தரிசித்து,,ஆசிகள் பெற்றன,அப்போது,சிந்தாமணியான காவிரியின் சிறப்புகளைப் பல சம்பவங்கள் மூலம் எடுத்துரைத்தார்.சிவபெருமான் என தெரிவிக்கிறது.

பிரம்ம தவத்தின் பயனாய்,காவேரன் எனும் மன்னனுக்கு,பெண் பிறக்க காவேரி எனும் நாமம் சூட்டி வளர்த்து வர,லோபமுத்ரா என்ற பெயருடன்,அவள் அகஸ்த்தியரை மணக்கிறாள்.அவள் விரும்பியபடியே நதிரூபமாகி,மோட்சம் அளிக்கும் வரத்தை அகஸ்தியமுனி அருளினார் என்பதுமுண்டு.

மகாராஜா சந்தனூ,பீஷ்மரைப் புத்திரனாக பெற்றது,அர்ச்சுனன் சுபத்திர யை மணந்தது,போன்ற நிகழ்வுகளும், விஷ்ணு “வீரஹத்தி” தோஷம் போக துலாஸ்நானம் செய்தது ,கங்கைக்கு தன் பாவம் போக்கிக் கொள்ள,துலா ஸநானம் செய்ய விஷ்ணு பகவான் கூறியது இப்படி பல விஷயங்களை துலா காவேரி மகாத்மியததில் காணலாமென்பர்.

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவேரியின் நீர்த் திவலைகள் புண்ணிய தீர்த்தமாகும். ஐப்பசி முதல் நாள் நீராட இயலாதோர்,இடைமுகம் என சொல்லப்படும் ஐப்பசி கடைசீ நாளில் நீராடிக் பலன் பெறலாம். அதுவும் முடியாதவர்கள்,முடவன் முழுக்கு என சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடிப்புனித       ம் பெறலாம் கை, கால் இழந்த மாற்றுத் திறனாளி. ஒருவர் மாயவரம் மயூரநாதரின் விஷேசமான துலா நீராடலைக் கண்டு பாவம் போக்க நினைத்தார், அங்கு வரும்போது கார்த்திகை முதல்தேதியாகிவிட,மனமுவந்து இறைவனை வேண்ட,இன்று நீராடுபவர்க்கும் அதே புண்ணியம் கிடைக்கப் பெற்றது என்பது கதை.

“தட்சிண கங்கை”என போற்றப்படும்,காவேரி துலா நீராடலில் (பிதுர்) முன்னோர் பூஜை, அன்னதானம், ஆடை தானம், அரசமரம் வலம் வருதல், கோமாதா பூஜை போன்றவையும் நடைபெறும். வாழ்வில் ஒரு தடவையாவது,துலா ஸ்நானம் செய்து இறையருள் பெறுவோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடுத்தடுத்து வெளியான அப்டேட்ஸ் – சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்

EZHILARASAN D

தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

Web Editor

திருச்சி மாநகராட்சியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

EZHILARASAN D