ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடாக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல பவானிசாகர் அணை 101 அடியை எட்டியுள்ளதால் உபரி நீர் ஆற்றில் திறக்கபட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வருவதால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் ஆற்றில் குளிக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.