முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜாதியை அடிப்படையாக வைத்து இந்துமதம் செயல்பட்டது கிடையாது – அண்ணாமலை பதில்

இந்துக்கள் பற்றி ஆ.ராசா பேசியிருப்பதற்கு விளக்கமளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் எந்த காலத்திலும் செயல்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நாளை மதுரைக்கு வருவதாகவும், காரைக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். பின்னர் சிவகங்கை, திருப்புத்தூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் இரண்டு நாட்கள் இங்கு இருப்பதாக கூறினார். ஜே.பி நட்டாவின் வருகை பாஜக-வினருக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிப்பதாக குறிப்பிட்ட அவர், நீலகிரி தொகுதியின் எம்பி ஆ.ராசாவின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றார். அவரின் சொந்த தொகுதியில் 90% மக்கள் அவரின் மீதான கோபத்தை வெளிப்படுத்தி, கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள் என குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இது தமிழ்நாட்டில் புதியது அல்ல என தெரிவித்த அண்ணாமலை, ஒவ்வொரு முறையும் இந்து சனாதன தர்மம் பற்றி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஆ.ராசா, தனது கருத்தை தவறு என ஒத்துக் கொள்ளாமல் இந்து பெண்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்படுகிறார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ள சனாதன தர்மம் ஆ.ராசாவுக்கு தெரியாது என்றார். ஜாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதம் எந்த காலத்திலும் செயல்பட்டது கிடையாது என அண்ணாமலை விளக்கமளித்தார்.

அரசியலின் தரத்தை குறைத்து காட்டி இருக்கிறார் ஆ.ராசா. இதை எதிர்த்து பேசிய பாஜகவினர் மீது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலி வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டினார். ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து மக்கள் மத்தியில் இது போன்ற எம்பி வேண்டாம் என மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவோம் என்றார். திமுக-வினரின் சர்ச்சை பேச்சுக்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதே பாஜகவின் முக்கிய பணியாக இருக்கும் என கூறினார். இந்து என்பது மதல் இல்லை அது வாழ்வியல் என்றார்.

 

கல்வியில் முதல் மாநிலமாக இருந்த தமிழகம் இன்று தலையை தொங்க விடும் நிலைமைக்கு உள்ளது. மாணவர்கள் கையில் மது, போதை பொருட்கள் இருக்கும் நிலைமை தான் தமிழகத்தில் உள்ளது என சாடினார். ராகுல்காந்தியின் பாதயாத்திரை நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அண்ணாமலை, காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு நடந்தது. இது பாஜக ஆட்சியில் இல்லை. மீனவர்கள் கைது என்பது மலைக்கும் மடுவுக்குமான வித்தியசமாக மாறி உள்ளது என்றும் கச்ச தீவை மீட்க வேண்டும் என்பது தான் மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்-4 பேர் கைது

Web Editor

தொடர் மழை எதிரொலி: அரியலுர், கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

G SaravanaKumar

’ஜெயலலிதாவைப் போலச் சிறப்பாக இபிஎஸ் செயல்படுவார்’

Arivazhagan Chinnasamy