முக்கியச் செய்திகள்

ஹெல்மெட் கட்டாயம்: ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த 15 நாட்களில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 98 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 18 பேர் பின்னால் அமர்ந்து சென்ற பயணிகள் என்பது தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட 315க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பயணிகளிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி ஹெல்மெட் விதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இந்த சோதனை தொடரும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் : ராஜஸ்தானை வீழ்த்தி ’பிளே ஆஃப்’ சுற்றுக்குள் நுழைந்தது கொல்கத்தா

Halley Karthik

பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்

Halley Karthik

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

Jayakarthi