திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!

தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.  தென் மாவட்டங்களான  திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்…

தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

தென் மாவட்டங்களான  திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள்  வெள்ள நீரில் சிக்கி உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூரில் பால், பிஸ்கட், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். திருச்செந்தூருக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் வரத்து இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் இல்லாமல்  தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.