அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து நாளை வெளியாகவுள்ள “ஜவான்” படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளாரா, இல்லையா என்பது பற்றி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை கொடுத்துள்ளார்.
அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்று சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. பிவிஆர் திரையரங்கில் (PVR) 1,12,299, ஐநாக்ஸ் (INOX) 75,661, சினிபோலிஸ் (CINEPOLIS) – 40,577 என மொத்தம் 2,28,538 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. சுமார் ₹9.01 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானது.
டெல்லியில் 39,535 ( ₹1.91 கோடி), மும்பை- 39,600 ( ₹1.57 கோடி), பெங்களூரூ 39,325 ( ₹1.42 கோடி), ஹைதராபாத்- 58,898 ( ₹1.35 கோடி), கொல்கத்தா 40,035 ( ₹1.16 கோடி ) என இந்தியா முழுவதும் முதல்நாள் காட்சிகளுக்காக 7 லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஜவான் முதல்நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் பதான் படத்தைப்போல் இப்படமும் ரூ.1,000 கோடி வசூல் குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய அனல் அரசுவிடம் நேர்காணல் ஒன்றில், “ஜவானில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள். அது உண்மையா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இருக்கு. ஆனா இல்லை’ என்றதுடன் “கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு காட்சி இருக்கிறது. ஆனால், அது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை” எனப் பதிலளித்துள்ளார்.