673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

சென்னையில் 5.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 6.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 59-வது மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காகத் தெரிவு செய்யப்பட்ட 673 புதிய இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.