குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்

தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை…

தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு அறிவித்த 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும் என்றும், படிப்புக்காக மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளதாகவும், இத்தகைய திருமணங் களை தடுத்து நிறுத்துவதற்காக பஞ்சாயத்து அளவிலான குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும், குழந்தை திருமணங்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையில் தனி பிரிவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.