பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள…

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தவாரம் அருகில் உள்ள கடைக்கு சென்ற அந்த சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பியதால், இதுகுறித்து அவரின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர்.

விசாரணை முடிவில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசு என்பவர் சிறுமியை கடத்தி சென்று நாமக்கல் அருகே உள்ள அவரது நண்பர் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டதுடன் இளைஞரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.