வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்…

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் டாக்டர் மிட்டல் கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை கண்கானிக்க, இந்திய
விலங்குகள் நலவாரிய உறுப்பினர் மிட்டல் தலைமையிலான அதிகாரிகள் குழு
மாவட்டத்தில் முகாமிட்டு பார்வையிட்டனர். அதன் பின்னர் கொடைக்கானல்
மலைப்பகுதிகளில் வன விலங்குகள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் குதிரைகள்
மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நகராட்சி
அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் டாக்டர் மிட்டல் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பற்ற முறையில்  தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஆனால்  ஜல்லிக்கட்டில், தற்பொழுது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதனையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்து வந்த பாதை

மேலும் ஜல்லிக்கட்டு காளைகளை வாடி வாசலுக்கு கொண்டு வர பின்பற்றப்படும் விதிமுறை மீறல்கள், மாடு பிடி வீரர்களிடம் பணம் வசூல் செய்யும் சட்ட விதி மீறல்களையும் தவிர்க்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை இதே போல பாதுகாப்பாக தமிழ்நாடு அரசு எதிர்வரும் காலங்களில் முறையாக நடத்தும் பட்சத்தில், தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இணைந்து இப்போட்டிகளை சர்வதேச அளவில் கொண்டு சென்று, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கும் பெற வைக்க முயற்சிக்கப்படும்.

இதனையும் படியுங்கள்: ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை

மேலும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, மாநில அரசு, காவல்துறை, பாதுகாப்பு படைப்பிரிவிகளில் அரசு வேலை கொடுக்க முன்வர வேண்டும். இது குறித்து  இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். இந்திய அரசும்  மாடு பிடி வீரர்களுக்கு  ராணுவத்தில் பணி வழங்க
முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என டாக்டர் மிட்டல் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.