வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தபாலில் வந்த போதை மாத்திரைகள், ஸ்டாம்புகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தபால் பிரிவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது வெளிநாட்டில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த பார்சலில் பரிசுப் பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகளுக்கு, அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் அதிலிருந்த முகவரியை ஆய்வு செய்தனர். அப்போது, அதிலிருந்தது போலியான முகவரி என்பது தெரிய வந்தது.
இதையும் படியுங்கள் : ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்
இதையடுத்து அந்த பார்சலை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்த போது, பச்சை நிறத்தில் 250 போதை மாத்திரைகள் மற்றும் 75 போதை ஸ்டாம்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், விலை உயர்ந்த இந்த போதை மாத்திரைகள், ஸ்டாம்புகள் இருந்த பார்சலை கேட்டு வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
விலை உயர்ந்த போதை மாத்திரைகள், ஸ்டாம்புகள் நீண்ட நேரம் போதையில் இருக்கச் செய்யக்கூடியவை என்பதால், இவை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய இருந்ததா? வெளிநாட்டில் இருந்து இந்த போதை பார்சல், சென்னையில் யாருக்காக கடத்தி வரப்பட்டது? என்ற பல்வேறு கோணங்களில் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.