அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் தூத்துகுடி வந்தடைந்தார். தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு வந்தார். அவரை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையும் படிக்கவும்: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா; அண்ணாமலை அறிவிப்பு!
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா
வைகுண்டசாமி தலைமை பதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். பதி நிர்வாகம் சார்பில் அவருக்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பின்னர் பதிக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
குடியரசு தலைவரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முதல் குமரியில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில் போலீஸ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.







