சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி மாபெரும் விவசாய கண்காட்சி!

கன்னியாகுமரி மாவட்டம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டைய ஒட்டி மாபெரும் விவசாய கண்காட்சி – விதவிதமான நெல் பயிர்கள், அரிய வகை மாங்காய் ரகங்கள் இடம் பெற்றன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ராஜாகமங்கலம்…

கன்னியாகுமரி மாவட்டம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டைய ஒட்டி
மாபெரும் விவசாய கண்காட்சி – விதவிதமான நெல் பயிர்கள், அரிய வகை
மாங்காய் ரகங்கள் இடம் பெற்றன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ராஜாகமங்கலம் வட்டார
வேளாண்மை தொழில்நுட்ப முகாம் மற்றும் விவசாய உழவர் நலத்துறை சார்பில் ,
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டைய ஒட்டி பிரம்மாண்டமான விவசாய கண்காட்சி
நடந்தது.

இதில்அரிய வகை நெற்பயிர்களான சுவர்ணா, மணிப்பூர் சோகோ,
அறுபதாம் குருவை, நூற்றுபத்து, பூதகாலி ,கருத்த நவரை, அஞ்சலி, கொல்லன் சம்பா,
ராஜலட்சுமி மற்றும் மொட்ட குருவை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நெல் பயிர்கள்
இடம் பெற்றன.

மேலும், யானை தோத்தா, ருமானி, இமாம்பசந்த் மற்றும் களப்பாடு போன்ற அரிய
மாம்பழ வகைகளும், 29 கிலோ எடை உள்ள ராட்சச காச்சி கிழங்கும் வைக்கப்பட்டிருந்தது.
இதோடு, நெட்டை மற்றும் குட்டை தென்னை ரகங்கள், தானிய வகைகள், ஊடுபயர்கள், பனை சார்ந்த பொருட்கள், காளான் வகைகள், உடலுக்கு ஊட்டமளிக்கும் தாவர வகைகள் போன்ற எண்ணற்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் , இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் நவீன
டிராக்டர் மற்றும் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை
பெண்கள் உட்பட ஏராளமானோர் கண்டு களித்தனர்.

——கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.