“அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது…

விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது மழை பெய்த நிலையில், பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் பயணிகள் மீது மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் மழை நீரில் நனைந்து கொண்டே பயணிக்கும் அவல நிலை
ஏற்பட்டது.

மேலும் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர், மழை நீரில் நனைந்து கொண்டே பயணிப்பதற்கு எதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்தனர். இதனால் பேருந்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் பின்னர் அவர்கள் டிக்கெட் எடுத்ததால் பிரச்சனை முடிவுக்குவந்தது. அதேநேரத்தில் சிறுவன் ஒருவன் மழையை ரசித்தவாறு “மழையே மழையே வா,வா” என்று மகிழ்ச்சியாக பாட்டுப் பாடியதை பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.