தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழப்பு -நீண்ட போரட்டத்திற்கு பின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்!!

தஞ்சாவூர் அருகே மதுபான கூடத்தில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவத்தில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரின் உடலையும் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதிலுள்ள அரசு மதுபானகூடத்தில்…

தஞ்சாவூர் அருகே மதுபான கூடத்தில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவத்தில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரின் உடலையும் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதிலுள்ள அரசு மதுபானகூடத்தில் மது வாங்கி குடித்த இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மதுகூடத்தின் உரிமையாளர் பழனிவேல், விற்பனையாளர்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகியோரை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

உயிரிழந்த இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்த நிலையில் மதுவில் சயனைடு கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க காவல்துறையினர் முயற்சித்தனர்.ஆனால் அவரது உறவினர்கள் மரணத்திற்கு உரிய காரணம் தெரியும் வரை உடல்களை வாங்க மாட்டோம், என போராட்த்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வருவாய் கோட்டாசியர் பழனிவேல் போராட்டகாரர்களுடன் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.இதனை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.