உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மொரப்பூர் வனச்சரகம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது!

தர்மபுரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரூர் காப்புக்காட்டில் மொரப்பூர் வனச்சரகத்தினர் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து சிந்தல்பாடி வழியாக செல்லும் சாலையில் 2…

தர்மபுரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரூர் காப்புக்காட்டில் மொரப்பூர் வனச்சரகத்தினர் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து சிந்தல்பாடி வழியாக செல்லும் சாலையில் 2 அரசு மதுபான கடைகள் உள்ளன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேவையற்ற வீட்டு உபகரணங்களையும் வனப்பகுதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதனால் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள், மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி தீயிட்டு அளித்தனர்.

மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் வனத்துறையினர், தூய்மை பணியாளர்கள், பொதுப்பணி துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.