நடிகர் அதர்வா ‘பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். இதனிடையே இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘இதயம் முரளி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.




