டி 20 உலக கோப்பை தொடரான இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 8 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் படி இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் காடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அணி விவரம்
இந்தியா : சஞ்சு சாம்சன் (WK), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (C), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
மேற்கிந்திய தீவுகள் : ஷாய் ஹோப் ( C & WK ), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ரோஸ்டன் சேஸ், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஃபோர்டே, ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹொசின், குடாகேஷ் மோட்டி மற்றும் ஷமர் ஜோசப்.







