சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி விமான பயணிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தி இருக்க
வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றது போன்ற நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நுழைவாயில்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என்றும், 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் மாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்பவும், பயணத்திற்குப் பின்பும் உடலை சுய கண்காணிப்பு செய்து கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை முதல் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும் பயணிகளில் 2 சதவிகிதத்தினருக்கு ரேண்டம் முறையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சென்னை விமான நிலையத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.