சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடைபெறும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் வருகை புரிந்துள்ளார். இதனை தொடர்ந்து மகளிர் தினவிழா தொடங்கியுள்ளது.
விழாவில் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் தவெக தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.







