முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் & மனைவி வங்கி கணக்கில் கை வைத்த வடமாநில கும்பல்! OTP இல்லாமல் ரூ.1 லட்சம் அபேஸ்!

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே ஒரு லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் ஒன்று திருடியுள்ளது. திமுக…

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே ஒரு லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் ஒன்று திருடியுள்ளது.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு ஜிபே கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி நடந்திருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், புதிய தொடர்பு எண் வந்ததும் எடுத்துப் பேசினோம்.

ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்தனர். அப்போது, எந்த ஓடிபி எண்ணும் சொல்லாமலேயே, வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும்,  அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. புதிய எண்ணிலிருந்து அழைத்த போது, ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொடர்ந்து அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்கிலிருந்து,  ஓடிபி எண் சொல்லாமலேயே, கைப்பேசி அழைப்பின் மூலமே பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.