திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அறிவிப்பு

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.  முன்னாள் மத்திய அமைச்சரும்,  நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா. தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். இவரது 15 அசையா சொத்துக்களை…

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சரும்,  நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா. தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். இவரது 15 அசையா சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்த போது பினாமி பெயரில் நடத்தி வந்ததாகக் கூறி கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தை நடத்தி வந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. 2002-ம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்களை தற்போது முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.