புதுச்சேரியில் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவுகளை தடுக்கும் வகையிலும், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சாகர் கவாச் என்கிற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கடலோர மாவட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், அரசு கட்டிடங்களை பாதுகாக்கும் வகையிலும், குறிப்பாக கலங்கரை விளக்கம், தலைமை செயலகம், சமையல் எரிவாயு கிடங்கு, மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் கடலோர மீன் பிடி துறைமுகம் ஆகியவைகளை இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரமாக கண்காணித்தனர்.
அதன்படி புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக பகுதியில் இருந்து கடலோர காவல் படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் படகுகள் மற்றும் மீனவர்களின் அடையாளங்கள் குறித்தும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்களாக என சோதனை செய்தனர்.
புதுச்சேரியின் மீனவ கிராமங்களான வைத்திகுப்பம் வீராம்பட்டினம் பூரணங்குப்பம் நல்லவாடு உள்ளிட்ட கரையோர மீனவ கிராமங்களில் சோதனை செய்தனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான புதிய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட்,பெரிய பெரிய நிறுவனங்களிலும் இந்த ஒத்திகை முன்னிட்டு காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.







