மேற்கு வங்கம், அசாமில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க…

மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுபோல் 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு, முதல் கட்டமாக 47 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜகவிற்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்வர் மமதா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அசாமில் ஆளும் பாஜக 39 தொகுதிகளிலும் அசாம் கணபரிஷத் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மேலும் காங்கிரஸ் 43 தொகுதிகளிலும் அதன் கூட்டணியில் ஆர்ஜேடி, அஞ்சலிக் கணமோர்ச்சா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அசாமில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக அசாமில் வெற்றிபெற்றது. இந்த முறை 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.