முக்கியச் செய்திகள்

ஒரு குடும்பத்திற்கான கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது : நிர்மலா சீதாராமன்!

ஒரு குடும்பத்திற்கான கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி பாஜக மகளிர் அணி சார்பில் பொதுகூட்டம் கருவடிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது, கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய அளவிலான கட்சியாக காங்கிரஸ் இல்லை என்றும் தற்போது குடும்பத்தை காப்பாற்றும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.

குடும்பத்தை காப்பாற்றும் கட்சியை விட, நாட்டை காப்பாற்றும் பாஜகவிற்கே மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அனைத்து மாநிலங்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் பிரதமர் மோடி எனத் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 2,079 பேருக்கு தொற்று உறுதி

Vandhana

“22 மாவட்டங்களில் கனமழை; மழையை எதிர்கொள்ள தயார்” – அமைச்சர்

Halley karthi

பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத் தொடர்: சபாநாயகர் அறிவிப்பு!

Nandhakumar