முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

“பாஜக, அதிமுக ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி!” அமைச்சர் செல்லூர் ராஜூ!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மதுரையில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜக, அதிமுக ஒற்றுமையை குலைக்க சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செல்லூர் ராஜூ தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் செய்தியார்களை சந்தித்து பேசுகையில், “பொதுமக்கள், பரப்புரை செல்லும் அனைத்து இடங்ளிலும் சிறப்பான வரவேற்பை அளிக்கின்றனர். ஊருக்கும், உறவினருக்கும் மட்டும் தெரிந்த இந்த செல்லூர் ராஜுவை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் மேற்கு தொகுதி மக்கள்தான். இந்த தொகுதிக்காக நான் உழைத்திருக்கிறேன். பொது மக்களின் வரவேற்பு மூலம் உழைப்பிற்கான அறுவடையை தற்போது பார்க்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவும் ஒற்றுமையாக இருப்பதே சகிக்க முடியாத சிலர் தோல்வி பயத்தில் போலியான கடிதத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். எனக்கும் அந்த கடிதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று அமைச்சர் கூறியுள்ளார். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறும் எதிர்க்கட்சியினர், குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார். அரசியலை வைத்து தொழில் நடத்தும் அளவிற்கு நான் இழிவான பிறவி கிடையாது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “என் மீது கடுகளவு குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டாலும் சட்டமன்ற வேட்பாளர் மனுவை வாபஸ் பெற தயார். பொது வாழ்க்கையில் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் காரில் போகும் போது மட்டுமே அமைச்சர். மற்ற நேரத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் வாக்குப்பதிவு நடைபெறக்கூடிய நிலையில், மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

அசராத முயற்சியால் அழகி பட்டம் வென்ற தேவதை!

Vandhana

பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

Saravana

பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலை,பணிபாதுகாப்பு குறித்த அச்சம்