முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி ராஜீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பாக பஞ்சாபைச் சேர்ந்த தமிழ் பேசும் விவசாயி ராஜீந்தர் சிங், பிரதமரின் அறிவிப்பு குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் அவர் கூறியதாவது, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற உள்ளதாகப் பிரதமரின் இன்றைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இன்று எங்களுடைய முதல் குரு குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் களத்தில் போராடி 750 விவசாயிகள் உயிரிழந்த பிறகு சட்டத்தைத் திரும்பப் பெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது மன உளைச்சலாக உள்ளது என்றும் கூறினார்.

இதனையடுத்து இந்த அறிவிப்பை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றி மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றார். அதுமட்டுமின்றி கோதுமை, அரிசி உள்ளிட்ட பயிர்களுக்கு எம்.எஸ்.பி. விலை நிர்ணயம் முழுமையாகச் செய்யப்பட்ட பிறகுதான் எங்களுடைய போராட்டம் நிறைவு பெறும் என்றார். மேலும் லக்கிம்பூர் கேரியில் 5 விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தியாகிகள். வேளாண் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டு  உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய இழப்புக்கு உரிய நிவாரணம் வேண்டும் என்றும் அக்காணொளியில் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ்; ராகுல் தனி வியூகம்

G SaravanaKumar

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

G SaravanaKumar

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பயங்கர தீ விபத்து!

EZHILARASAN D