முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நாளை அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.

நாட்டு மக்களிடையே இன்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக திடீரென அறிவித்தார். வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை என்றும் தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடிய வில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அந்தச் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்கள் தவறு என்ற அவர், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில்மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, கூறியதாவது:

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியதன் விளைவாக, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இன்றும் விவசாயிகள் கையில்தான் உள்ளது. வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயி களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நாளை அஞ்சலி செலுத்தப்படும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருவதற்காக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

’ஜெய்பீம்’ படம் சர்ச்சை பற்றி கேட்டபோது, அந்தப் படம் என்பது சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களைப் பற்றி பேசும் படம், அதில் இன்னொரு சமூகத்தை கொண்டு வந்து தங்களுடைய அரசியல் லாபத்துக்காக அன்புமணியும் ராமதாசும் பேசுவது வருத்தத்துக்கு உரியது என்றார்.

Advertisement:
SHARE

Related posts

புதிய தொழில் கொள்கைக்கு நன்றி தெரிவித்த டான்சியா!

Niruban Chakkaaravarthi

12 மொழிகளில் வெளியாகிறது ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’

Halley Karthik

ஐபிஎல் வீரர்கள் காலக்கெடு இன்றோடு முடிவு: தோனி, கோலி, ரோகித் தக்கவைப்பு

Halley Karthik