நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வரும் 19ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்ற கட்டடத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களிலும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் குர்ணம் சிங், கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.