முன்னணி நடிகர்களின் ரசிகர் காட்சிகள் – விதிகளை வகுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு..!

தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் படத்தின் ரசிகர் காட்சிகளுக்கு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும்…

தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் படத்தின் ரசிகர் காட்சிகளுக்கு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்களின்  ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் மற்றும்  புதிய பட ட்ரெய்லர் வெளியிடப்படும் போது ரசிகர்கள் அதிக அளவில் திரையங்குகளில் கூடி ஆரவாரம் செய்வதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் எனக் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் லியோ ட்ரைலர் வெளியீட்டின் போதும்,  வாரிசு மற்றும் துணிவு படத்தின் முதல் நாள் காட்சியின் போதும்  வன்முறை மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இதனால் ரசிகர் காட்சியின் போது வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் உயிரிழப்பு மற்றும் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் அய்யா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.