”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் “ – இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தல்

”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் . அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என  இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது…

”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் . அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என  இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.  9000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில்  காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது.  இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 8வது நாளாக தொடா்ந்து வருகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான போரில் லெபனானின் எல்லைப் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் இஸ்ஸாம் அப்துல்லா ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவர் லெபனான் எல்லை செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது இந்த தாக்குதல் நடைபெற்றதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காஸாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்ததை திரும்ப பெற வேண்டும் என ஐநா தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா தலைவர் ஆண்டனோ கட்டர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..

“ பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து பல லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனை இஸ்ரேல் திரும்ப பெற வேண்டும். ஏனெனில் இந்த முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் “ என ஆண்டனோ கட்டர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.