முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர் களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வினோத். ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், வழக்கம் போல நேற்று அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.

அப்போது இவர் வீட்டுக்கு நான்கு பேர் வந்தனர். ஒருவர் கதவைத் தட்டி மின்சாரத் துறையில் இருந்து வருகிறோம். சின்ன வேலை இருக்கிறது என்று கூறினார். அதை நம்பி வினோத்தின் மனைவி சீமா கதவைத் திறந்தார்.

முதலில் உள்ளே நுழைந்த ஒருவன், துப்பாக்கியைக் காட்டி சீமாவை பின்னால் போகச் சொன்னான். அதற்குள் மற்ற கொள்ளையர்களும் வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் வினோத்தின் அம்மா, குழந்தைகள், சீமாவின் சகோதரர் ஆகியோர் இருந்தனர். அவர்களை மிரட்டி சாவியை வாங்கிய கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பினர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இதுபற்றி சீமா அளித்த புகாரை அடுத்து போலீசார், வீட்டுக்கு வந்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமாரவை சோதனை செய்து பார்த்தனர். அதனடிப்படையில் தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அஸ்வினி குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

நீட் தேர்விலிருந்து முதலமைச்சர் நிச்சயம் விலக்கு பெற்றுத்தருவார்: மா.சுப்பிரமணியன்

Vandhana

மத்திய பாஜக அரசு மக்களின் உரிமைகளை பறிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு

Vandhana