தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான ஏப்ரல் 4ஆம் தேதி அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான ஏப்ரல் 4ஆம் தேதி அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்ததாவது, வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும், எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கே.என்.நேரு வழக்கு, சிபிஐக்கு மாற்றம் செய்தது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்றும், அவர் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும், என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

மேலும் மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 817 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், ஒவ்வொரு குழுவிலும் 4 நபர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்கு கடைசி நாள் என்பதால் அன்று வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாலை 7 மணி வரை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபடலாம் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.