ஜெர்மனியில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள கட்டுப்பாடு!

ஜெர்மனியில் 60 வயதிற்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கடுப்பாடு. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 1.21 கொடியை கடந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் ஆஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள்…

ஜெர்மனியில் 60 வயதிற்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கடுப்பாடு.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 1.21 கொடியை கடந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் ஆஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கனடாவில் 60 வயதிற்கு குறைவானவர்களுக்கு ஆஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசியை செலுத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியும் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கத்தொடங்கியுள்ளது.

ஆஸ்ட்ராஜென்காவின் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், இதை எடுத்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் தனிப்பட்ட பாதிப்புகள் குறித்து முன்னரே அறிந்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பியாவின் சுகாதார கண்காணிப்பு குழுவும் ஆஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவித்துள்ளது. ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த உறைதல் பிரச்னை ஏற்படுகிறது என குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ளது.

இந்த ரத்தம் உறைதல் பிரச்னையானது மிக குறைவாக இருந்தபோதிலும், இது மிகவும் கவலைக்குரியது என ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 60 வயதிற்கு குறைவானவர்களுக்கு ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசி எடுத்துக்கொள்ள கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.