உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்…

புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 39 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயம் 12 கிலோமீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டி பந்தயம் 9 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது. இந்த போட்டியை, சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கண்டுகளித்தனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள, வளையக்காரனூர் பகுதியில், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரமைப்பு சார்பில் 7ஆவது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளையை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.