தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபப்ட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிதித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெய்டென்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த தாரேஸ் அகமது, சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர்நலன் மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் தனிச்செயலர் -3 ஆக இருந்த அனு ஜார்ஜ், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.







